• Sep 18 2024

வேட்டையன் முதல் பாடலை பாடியது இவரா? யாருமே எதிர் பார்க்காத சர்ப்ரைஸ்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். இந்த திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள முதல் பாடல் நாளைய தினம் மாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மனசிலயோ என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களை கவரும் எனவே எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியில் இறுதியாக வெளியான ஜெயிலர் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் வரவேற்பு பெற்றன. அதுபோல வேட்டையன் படத்திற்கும் சிறந்த பாடலையும் பின்னணி இசையையும் அனிருத் கொடுப்பார் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்து உள்ளார்கள்.


 'வேட்டையன்' திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன்,  மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ஃபகத் பாசில், ராணா  உள்ளிட்ட பலர்    நடித்துள்ளனர்.

மேலும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்திற்காக மலேசிய வாசுதேவன் குரலை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இந்தப் பாடலில் கொண்டு வந்ததாக கூறப்படுகின்றது. மேலும் மனசிலயோ முழு பாடல் நாளை மாலை முழுமையாக வெளியாகும் அதனை கேட்டு மகிழுங்கள் என இதன் தயாரிப்பு நிறுவனம் twitter பக்கத்தில் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement