• Oct 30 2026

காலமானார் பிரபல பாலிவுட் நடிகர்.. சோகத்தில் ரசிகர்கள்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

ஹாலிவுட் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த பிரபல நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் தனது 86 வயதில் காலமானார். இவரது மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஸ்டார் ட்ரெக்' தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்ட் கதாபாத்திரத்திலும், 'எக்ஸ்-மென்' (X-Men) திரைப்படங்களில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்திலும் நடித்து உலகளவில் புகழ்பெற்றவர் பேட்ரிக் ஸ்டீவர்ட்.

இவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் கடந்த புதன்கிழமை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்சைமர் நோய் மற்றும் லூயி பாடி டிமென்ஷியா ஆகிய பாதிப்புகளுடன் சிறிது காலம் போராடி வந்த நிலையிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

அவரது மறைவு குறித்த செய்தி, அவரது அதிகாரபூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் தங்களது இரங்கல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், அவருடன் இணைந்து நடித்த ஹாலிவுட் நடிகர் ஹியூ ஜேக்மன் உள்ளிட்ட பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அவர் நடித்துள்ள 'அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அவரது மறைவு ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement