• Sep 18 2024

15 நாட்கள் சிறையில் இருக்க காரணம் இதுதான்.. மன்சூர் உடைத்த உண்மை

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மிகவும் பிரபலமான வில்லனாக வலம் வந்தவர் தான் மன்சூர் அலிகான். இவரது உடல் மொழியும் பேச்சு திறமையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே அரசியலிலும் அடி எடுத்து வைத்தார். ஆனால் அதிலும் அவரால் சோபிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து சர்ச்சையாக பல பதிவுகளை பேசி வருகின்றார்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென என அரசியலிலும் நுழைந்தார். நாம் தமிழர் கட்சியில் இணைந்த அவர் அதன் பின்பு அக்கட்சியில் இருந்தும் விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார். ஆனால் காலப்போக்கில் அந்த கட்சியின் காணாமல் போனது.

இவர் வழங்கும் பேட்டிகளில் அவர் பேசும் முறையும் அவரது பாடி  லாங்குவேஜ்ஜூம் சிரிக்கும் வகையில் காணப்படும். இவருடைய வீடியோக்களை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்தும் வந்தார்கள். அரசியலிலும் களம் இறங்கி சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வியையும் சந்தித்தார்.

லோகேஷ் கனகராஜ் மன்சூர் அலிகான் ரசிகர். கைதி கதையையும் அவரை வைத்து தான் எழுதினார். அந்த படத்தில் மன்சூரால் நடிக்க முடியவில்லை. அதன் பின்பு லியோ படத்திலும் தனது தயாரிப்பில் சரக்கு படத்திலும் நடித்தார்.


இதற்கிடையில் ஜாலியாக பேசும் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டார். திரிஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி நீதிமன்றம் வரை சென்றார்.

இந்த நிலையில், சரக்கு என்ற படத்தில் நடித்த மன்சூர் அலிகான் நடிகர் சங்க கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், சங்கம் இருக்கும் வரைக்கும் தான் நடிகர்களால் சந்தோஷமாக இருக்க முடியும். சினிமாவை கேவலப்படுத்த சிலர் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனாலும் சினிமாவை விட்டுக் கொடுக்கக் கூடாது.

நான் பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்டு 15 நாட்கள் சிறையில் இருந்தேன். 2011 ஆம் ஆண்டு நவம்பரில் விடுதலை ஆனேன். அதற்கு பின் அந்தப் பெண் எனக்கு 50 லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என தீர்ப்பு வந்தது.

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. நடிகர் சங்கம் அப்போது என்னை காப்பாற்றவில்லை. நில ஆக்கிரமிப்பிலும் நான் சிறைக்குச் சென்றேன். அரசியலில் நுழைய  நான் எப்போது ஆசைப்படுகின்றேனோ அப்போதெல்லாம் நாசப்படுத்தப்படுகிறேன். நாங்கள் யாரும் உத்தமர் என்று சொல்லவில்லை சராசரி மனிதர்கள் தானே என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement