• Oct 16 2024

ஆண்களுக்கும் பாதிப்பு இருக்கா? விஷால் சொன்ன முக்கிய தகவல்?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க கட்டடப் பணிகளை மீண்டும் தொடர வேண்டும் என உதயநிதி தனது சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயையும் மேலும் 5 கோடி ரூபாய் பரிந்துரையுடன் ஏற்பாடு செய்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மலையாள சினிமாவில் பூகம்பமாக வெடித்துள்ள ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி திரையுலகில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தமிழ்த்  திரை உலகில் இது போன்ற பிரச்சனைகள் உள்ளதா என்பதை விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

அதன்படியே தற்போது தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி விசாரிப்பதற்காக ரோகினி தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதில் புகார் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்க முடிவும் செய்துள்ளார்கள்.


மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய புகார்களை தெரிவிக்க தனி தொலைபேசி எண்ணும், மின்னஞ்சல் முகவரியும் கொடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவே மீடியாக்களில் பேச வேண்டாம் என்று குறித்த குழு அறிவுறுத்தி  உள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷால் தென்னிந்திய சினிமா துறையில் அச்சுறுத்தல், பாதிப்பு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் உள்ளது. இது தொடர்பில் ஆண்களும் புகார் அளிக்க முன் வரவேண்டும். அவ்வாறு புகார் அளிக்கும் பட்சத்தில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement