• Jan 19 2025

சிகரெட் பிடிக்காத என்று எனக்கு சொன்ன விசித்ரா, ஆனா இப்போ? பிக்பாஸ் வீட்டுக்கு போனா நல்லா கேப்பன்! கடும் கோபத்தில் ஷகிலா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதோடு, இன்னும் சில நாட்களில் இறுதி கட்டத்தை எட்டவுள்ளது. 

பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் ஆண்டனி சென்ற பிறகு விசித்ராவுக்கு ரசிகர்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமானது. 

அவருடைய கருத்துக்களும், தனக்கு எதிராக செயல்படும் ஹவுஸ்மெட்ஸை அவர் டீல் செய்யும் விதமும் ரசிக்ர்களை கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களின் குடும்பம், உறவினர்கள் வந்துள்ளதால், ஒரே ஆனந்த கண்ணீரும் பாசப்பிணைப்பையும்தான் அதிகம் பார்க்கக் கூடியதாக உள்ளது.


இந்த நிலையில்,  நடிகை ஷகீலா விசித்ராவை பற்றி கூறிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், 

பிக்பாஸ் வீட்டிற்குள் நான் போனால் விசித்ராவை நல்லா கேட்பேன். ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் விசித்ரா சொன்ன அந்த தெலுங்கு நடிகர் பற்றித்தான். தமிழ் பிக்பாஸை ஆந்திர மக்களோ கேரள மக்களோ பார்ப்பதில்லை. இருந்தாலும் இந்த விஷயம் லீக் ஆனதும் அவர்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் தெரியுமா?


எனக்கு பயம் விசித்ராவுக்கு ஏதும் நடந்திடுமோ என்று தான். இது பொறாமை இல்லை. அவர் மேல இருக்கும்அக்கறையில் தான் சொன்னன். இந்த விஷயத்தை அங்கு போய் கூற வேண்டியதே இல்லை. 

ஆனாலும், நான் தெலுங்கு பிக்பாஸிற்குள் சென்ற போது, என்னிடம் தயவுசெய்து சீகரெட் பிடிக்காதே என்று விசித்ரா சொல்லி தான்  அனுப்பினாள்.

எனினும், என்னால் அங்கு சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியவில்லை. சிகரெட் பிடித்தேன். அது அப்போது வைரலானது. 

இவ்வாறு, என்ன நடந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகத்தான் இருக்கிறோம் என்று மேலும் கூறினார்.

Advertisement

Advertisement