விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஹாய்’. இவர்களுடன் ராதிகா, பாக்யராஜ், பிரபு உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான நிலையில், ரசிகர்களிடையே ஓரளவுக்கு வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ‘ஹாய்’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, படம் வெளியாகி ஏழு நாட்களை கடந்துள்ள நிலையில், நேற்று மட்டும் சுமார் ரூ.77 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முந்தைய ஆறாவது நாளில் ரூ.78 லட்சம் வரை வசூலித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் ‘ஹாய்’ திரைப்படம் ஏழு நாட்களில் இந்திய அளவில் மொத்தமாக ரூ.8 கோடியே 98 லட்சம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, வார நாட்களிலும் படத்துக்கு ஓரளவு ரசிகர்கள் வருகை இருப்பது படக்குழுவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறை நாட்கள் என்பதால், திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் ‘ஹாய்’ படத்தின் வசூல் மேலும் உயருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
Listen News!