தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நயன்தாரா. இவர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது அவருடன் ஏற்பட்ட காதலால் ஆறு வருடங்களுக்குப் பின் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இதை தொடர்ந்து வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. சினிமா துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றாரோ அதேபோல தனது குடும்பம் பிள்ளைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கவனித்து வருகின்றார் நயன்தாரா..
திருமணத்திற்கு பின்பும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி அளவில் வசூலித்திருந்தது. ஆனால் இவர் தனியாக நடிக்கும் திரைப்படங்கள் தற்போது பெரிதளவில் வரவேற்பை பெற வில்லை.
விக்னேஷ் சிவனும் தற்போது பிரதீப் ரங்க நாதனை வைத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கி வருகின்றார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா, கீர்த்தி செட்டி ஆகியோர் நடிக்கின்றார்கள்.
இந்த நிலையில், இன்றைய தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நயன்தாரா தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் விநாயகரை வழிபட்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..
Listen News!