• Sep 16 2024

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் கிளிம்ஸ் வீடியோ விரைவில்..

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் விக்னேஷ் சிவன். அதன் பிறகு அவர் இயக்கிய நானும் ரவுடி தான் என்ற படம் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது.

இதைத்தொடர்ந்து இறுதியாக காத்து வாக்குல இரண்டு காதல் என்ற படத்தை இயக்கியிருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்துள்ளார்கள்.

தற்போது எல்ஐகே (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கி வருகின்றார் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யாவும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதன் காரணத்தினால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.


இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளதாம். படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக சீமான் வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ விரைவில் வெளியாக  உள்ளதாக விக்னேஷ் சிவன் அறிவித்துள்ளார். இப்படம் சயின்ஸ் பிக்சனுடன் இணைந்த காதல் கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Advertisement

Advertisement