தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித் குமார், தற்போது கார் ரேஸிங் போட்டிகளில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் அவர் எப்போது மீண்டும் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே தொடர்ந்தாலும், அதற்கு மாற்றாக அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தும் ஒரு முக்கிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதுதான், அஜித்தின் மெகா ஹிட் படமான ‘மங்காத்தா’ மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படுவது.

2011ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படம், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி, அஜித் ரசிகர்களிடையே கொண்டாட்டமாக மாறிய படம். ‘தல’ அஜித் இதற்கு முன்பு செய்த பாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நெகட்டிவ் வேடத்தில் நடித்த இந்த படம், வெளியான முதல் நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸில் அதிரடி சாதனைகளை படைத்தது.
இந்நிலையில், வருகிற ஜனவரி 23ஆம் தேதி ‘மங்காத்தா’ படம் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரீ ரிலீஸுக்கு முன்பாகவே, ‘மங்காத்தா’ படத்தின் முன்பதிவு (Advance Booking) தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் மட்டும், இப்படம் ரூ.60 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரீ ரிலீஸ் படத்திற்கு கிடைக்கும் இந்த அளவிலான வரவேற்பு, தமிழ் சினிமாவில் மிக அரிதான ஒன்று என்பதால், திரையுலக வட்டாரங்களையும் இது ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பல ரசிகர்கள், மங்காத்தா வெளியான காலத்தில் திரையரங்கில் படம் பார்க்க முடியவில்லை என்றும், மீண்டும் பெரிய திரையில் அஜித்தின் “வில்லன்” நடிப்பை காண ஆவலாக இருப்பதாகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
Listen News!