• Feb 12 2026

30 லட்சத்துக்கு விற்ற படம்.. 9 கோடி வசூலித்தது.! ‘மன்மதன்’ ரகசியத்தை உடைத்த சிம்பு

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிம்பு நடிப்பில் வெளியான ‘மன்மதன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் முக்கியமான காதல்-ஆக்சன் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 2004ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சிம்புவின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைந்தது.


இந்நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், ‘மன்மதன்’ படம் தொடர்பாக சிம்பு பகிர்ந்துள்ள தகவல் தற்போது ரசிகர்களையும் திரையுலக வட்டாரங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘மன்மதன்’ திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு, படத்தின் கதை, பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.


அந்த காலகட்டத்தில் சிம்பு இளம் நடிகராக இருந்த போதும், ‘மன்மதன்’ அவரை ஒரு வித்தியாசமான நடிகராக அடையாளப்படுத்தியது.

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்பு, ‘மன்மதன்’ படத்தின் தெலுங்கு உரிமை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர் அதன்போது, “மன்மதன் படத்தின் தெலுங்கு உரிமையை வெறும் 30 லட்சம் ரூபாய்க்குத் தான் விற்றேன். ஆனால் அந்தப் படம் அப்பவே 9 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணிச்சு. நல்ல படத்தைக் கொடுத்தால் தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடுவாங்க. படம் நல்லா இருந்தா ஒரே ஷோ போதும்… படத்தைக் கொண்டாடிடுவாங்க.” என்று கூறியுள்ளார். 

சிம்பு கூறிய இந்த விஷயம், அன்றைய காலகட்டத்தில் தெலுங்கு மார்க்கெட்டில் தமிழ் படங்களுக்கு இருந்த வரவேற்பை மீண்டும் நினைவூட்டுகிறது. 

Advertisement

Advertisement