• Feb 20 2026

ராஜியின் வருகையால் மகிழ்ச்சியில் காந்திமதி.! சதி திட்டம் போடும் சக்திவேல்.. டுடே ரிவ்யூ

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, ராஜி தன்ர வீட்டு வாசலில நிற்கிறதைப் பார்த்த சக்திவேலோட மனைவி சந்தோசத்தில் கத்துறார். பின் வடிவு ராஜியைப் பார்த்த உடனே அழுகிறார். அதைத் தொடர்ந்து காந்திமதி இப்பதான் உன்னை பற்றி நினைத்தேன் என்று சொல்லி ராஜியை கட்டியணைக்கிறார். மேலும், வீட்டில எல்லாரும் நல்லா இருக்காங்களா என்று காந்திமதி கேட்க, அதுக்கு ராஜி அவங்க எல்லாம் இருக்காங்க என்கிறார்.


பின் வடிவு வெயில் படாமல் வளர்த்த என்ர தங்கத்த பொலிஸ் ஸ்டேஷன் எல்லாம் அலைய வைச்சிட்டாங்க என்று சொல்லி அழுகிறார். அதைக் கேட்ட ராஜி அழாத அம்மா என்கிறார். அந்த நேரம் பார்த்து முத்துவேல் அங்க வந்து நிற்கிறதைப் பார்த்த ராஜி நல்லா இருக்கீங்களா என்று கேட்க்கிறார். மேலும், உங்களை எல்லாம் பார்க்கணும் என்று தோணிச்சு அதுதான் வந்தேன்.. நான் இங்க வரலாமா என்று கேட்கிறார். 

அதைக் கேட்ட முத்துவேல் நல்லா இருக்கியா என்று கேட்க்கிறார். பின் முத்துவேல் ராஜி கூட எதுவுமே கதைக்காமல் அங்கிருந்து கிளம்புறார். மறுபக்கம் சக்திவேல் குமாரைப் பார்த்து ராஜி இண்டைக்கு வீட்ட வந்தால் என்கிறார். அதைக் கேட்ட குமார் அவள் எதுக்கு அங்க எல்லாம் வந்தால் என்று கேட்கிறார். பின் சக்திவேல் இப்புடி எல்லாம் ஒட்டி உறவாட நான் விடமாட்டேன் என்கிறார்.


அதனை அடுத்து ராஜி காந்திமதி கூட சந்தோசமா கதைச்சுக் கொண்டிருக்கிறார். பின் காந்திமதி ராஜியைப் பார்த்து அடிக்கடி வீட்டுக்கு வா என்கிறார். மறுபக்கம் கோமதி ராஜியை இவ்வளவு நேரமா காணேல என்று சொல்லி தேடுறார். பின் ராஜியை பார்த்தவுடனே அங்க என்ன நடந்தது என்று கேட்கிறார். அதைத் தொடர்ந்து ராஜி சொன்னதை எல்லாம் கேட்ட உடனே கோமதி சந்தோசபப்டுறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement