• Apr 26 2024

விஜய் அம்மா ஷோபா செய்த சாதனை: தளபதி அம்மானா சும்மாவா...குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் கணக்கு ஆரம்பத்தி வேகத்தில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.

 ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் கணக்கு துவங்கியதும் தனது மகனின் புகைப்படத்தை தான் முதலில் பதிவிட்டு இருந்தார்.

தளபதி விஜய் மற்றும் அவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் ட்விட்டரில் கணக்கு வைத்திருக்கிறார்கள். மேலும் அதில் எஸ்.ஏ. சந்திரசேகர் தான் ட்விட்டரில் படு ஆக்டிவாக உள்ளார்.


இவ்வாறுஇருக்கையில்  விஜய்யின் அம்மா ஷோபாவும் ட்விட்டருக்கு வந்திருக்கிறார். தான் விஜய்யுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்து இருக்கிறார்.

ஷோபா சோஃபாவில் அமர்ந்திருக்க அவர் காலடியில் தரையில் உட்கார்ந்திருக்கிறார் விஜய். லியோ பட கெட்டப்பில் விஜய் இருக்கும் அந்த புகைப்படத்திற்கு இதுவரை 23 ஆயிரம் லைக்ஸுகள் கிடைத்திருக்கிறது. ஷோபா ட்விட்டருக்குவந்த 13 மணிநேரத்தில் அவருக்கு 11.4 ஆயிரம் ஃபாலோயர்கள் கிடைத்துள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஷோபா ட்விட்டரில் கணக்கு துவங்கியதை பார்த்த தளபதி ரசிகர்களும், பிரபலங்களும் அவரை வரவேற்று கமெண்ட் போட்டிருக்கிறார்கள். எஸ்.ஏ. சந்திரசேகரை சின்னத்திரைக்கு அழைத்துச் சென்றிருக்கும் ராதிகா சரத்குமாரும் ஷோபாவை வரவேற்று ட்வீட் போட்டுள்ளார். விஜய்யின் ரியல் அம்மாவை வரவேற்று ரீல் அம்மா போட்ட ட்வீட்டுக்கும் லைக்ஸுகள் வந்து குவிந்துவிட்டது.




Advertisement

Advertisement

Advertisement