• May 05 2024

வெற்றியடைய வேண்டுமென்றால் பல தடைகளைத் தாண்ட வேண்டும்- முதல்வர் கண்காட்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன்

stella / 1 year ago

Advertisement

Listen News!


சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மண்டேலா திரைப்படம் மூலம் பிரபலமான மடோன் அஸ்வின் மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாவீரன் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

 அதன்படி இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் பட ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்தது. இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது.


மாவீரன், அயலான் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் இன்றைய தினம் முதல்வர் இடத்தில் நடந்த கண்காட்சிக்குச் சென்றுள்ளார்.


 அங்கு பத்திரிகையாளருடன் கலந்து பேசிய அவர் முதல்வர் இந்த இடத்திற்கு வர பல தடைகளைத் தாண்டி தான் வந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்.ரொம்ப சந்தோஷமாக இருக்கு இந்த கண்காட்சிக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி என்றும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement