பிரபல இயக்குநர் அன்பு இயக்கத்தில் இளையராஜாவின் இசையமைப்பில் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள "படை தலைவன்" படத்தின் ட்ரெய்லர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியவில் வெளியிடப்பட்டுள்ளது.
ட்ரெய்லரில் அதிரடி காட்சிகள் மற்றும் சண்முக பாண்டியன் யானை பாகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும், மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம் என்னவெனில் AI தொழில்நுட்பம் மூலம் நடிகர் விஜயகாந்த் தோற்றத்தை படம் முழுவதும் மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.
AI மூலம் உயிர்ப்பிக்கப்பட்ட விஜயகாந்த் காட்சி ரசிகர்களிடம் பரவலான பாராட்டை பெற்றுள்ளது. படம் திரைக்கு வருவதற்குள் ட்ரெய்லர் சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளதுடன் ரசிகர்கள் பலரும் கேப்டனின் ஆசிர்வதித்தால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்,கேப்டன் மட்டும் நேரில் பார்த்திருந்தால் மிகவும் சந்தோசப்பட்டு இருப்பார்,"என பலவிதமாக கமெண்ட் செய்துள்ளனர்.வீடியோ இதோ ..
Listen News!