விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில் பல போட்டியாளர்கள் மிக்சர் பார்ட்டிகளாகவே காணப்படுகின்றார்கள். இந்த சீசன் வர வர ரொம்ப போர் அடிக்குது. அதனால ஏதாவது பண்ணுங்க என்று பிக்பாஸ் பார்வையாளர்களும் தெரிவித்து வருகின்றார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் 10 வாரங்களை கடந்த நிலையிலும் இன்னும் சுவாரஸ்யம் பத்தவில்லை என்றே தோணுகிறது. இறுதியாக நடைபெற்ற ஏஞ்சல்ஸ் டெவில்ஸ் ஸ்டாக்கில் போட்டியாளர்கள் ஒழித்து வைத்த எமோஷன்களை எல்லாம் கொட்டி இருந்தார்கள்.
இதை தொடர்ந்து இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் 10 வாரங்களை கடந்தும் இவங்க எப்படித்தான் இருக்காங்களோ என நீங்க நினைக்கும் போட்டியாளர்களை சொல்லுமாறு அறிவிக்கப்பட்டது.. இதனால் யாரிலும் பாராபட்சம் பார்க்காமல் சக போட்டியாளர்கள் மீது வன்மத்தை கொட்டி தீர்த்து இருந்தார்கள்.
இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பவித்ரா, என்ன அந்த நாலு பேரும் ரொம்ப மோசமா ட்ரீட் பண்றாங்க என்று தர்ஷிகாவிடம் சொல்லிப் புலம்புகின்றார். தர்ஷிகாவும் அவங்க தான் என்னையும் டார்கெட் பண்ணுறாங்க என்று பவித்ராவிடம் சொல்லிக் புலம்பியுள்ளார்.
சீரியல் நடிகையான பவித்ரா மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்பட்டார். ஆனால் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு அவர் பல இடங்களில் பெயில் ஆகி வருகிறார். ஏஞ்சல்ஸ் டெவில்ஸ் டாஸ்க்கில் நன்றாக விளையாடிய பவித்ரா அதற்குப் பிறகு எங்க இருக்காங்க என்றே தெரியவில்லை.
தற்போது பெஸ்ட் பர்ஃபார்மர், வேஸ்ட் பர்ஃபார்மர் டாஸ்கில் வேஸ்ட் பர்ஃபார்மராக பவித்ராவை தான் தேர்ந்தெடுத்தார்கள். இதில் பவித்ராவுக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. அதிலும் தன்னை நான்கு பேர் ரொம்ப மோசமாக ட்ரீட் பண்ணுவதாக தெரிவித்துள்ளார்.
அதில் தீபக், மஞ்சரி, ஜாக்குலின் மற்றும் முத்துக்குமரன் ஆகியோரை குற்றமும் சாட்டியுள்ளார். எனினும் பிக்பாஸ் வீட்டில் இந்த நாலு பேரும் தான் நன்றாக விளையாடுகின்றார்கள், ஏனைய போட்டியாளர்கள் மிக்ஸர் சாப்பிட வந்தது போலவே காணப்படுகின்றார்கள் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!