சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மீனாவுக்கு மண்டபத்தை அலங்கரிப்பதற்கான ஆர்டர் ஒன்று வருகின்றது. அதன்படி ஆர்டர் கொடுத்தவர்கள் அங்கிருந்த மேனேஜரிடம் இந்த பொண்ணுதான் எங்களுக்கு வேண்டும் என்று சொல்ல, அவர் வழக்கமாகவே இந்த ஆர்டரை எடுப்பவர் சிந்தாமணி. அவர்தான் செய்வார் என்று சொல்கின்றார்.
ஆனாலும் ஆர்டர் கொடுத்தவர்கள் மீனாவை தான் வேணும் என்று சொல்ல, அங்கு வந்த சிந்தாமணி அப்படி என்றால் இருவரும் கொட்டேஷன் கொடுக்கின்றோம் நீங்கள் அதில் தேர்ந்து எடுங்கள் என்று சொல்லுகின்றார்.
d_i_a
அதன்படி மீனா கொடுத்த கொட்டேஷனில் ஒரு லட்சம் ரூபாய் வருகின்றது. ஆனால் சிந்தாமணி ஒரு பேப்பரில் மீனா கொடுக்கும் கொட்டேஷனில் பாதி விலைக்கு ஆர்டர் எடுக்கின்றேன் என்று எழுதி கொடுக்கின்றார். இதனால் மீனாவின் ரேட் அதிகமாக இருக்கின்றது என்று சிந்தாமணியின் ஆர்டர் எடுக்கின்றார்கள்.
மேலும் நீங்க இப்பதானே ஆரம்பிச்சு இருக்கீங்க.. அதனால சின்ன சின்ன ஆர்டர் எடுத்து பண்ணுங்க என்று சொல்லி அனுப்புகிறார். மீனா வெளியில் வரும் போது அங்கு வேலை செய்யும் பெண், சிந்தாமணி இழவு வீட்டையே வாங்கி விற்பவர். அவங்க கூட கவனமா இருக்குமாறு எச்சரித்து அனுப்புகிறார்.
இதைத்தொடர்ந்து விஜயா மனோஜின் வேலை செய்வதற்காக சேலைகளை செலக்ட் பண்ண முடியாமல் ரோகிணியை அழைத்து செலக்ட் பண்ணுகிறார். அதன் பின்பு மீனா மாலை கட்டிக்கொண்டு இருக்க, அங்கு வந்து விஜயா காலையில் நேரத்துக்கு போகணும்.. நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று திட்டுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!