• Jan 15 2025

வெளியே போங்க ஐயா! கோவிலில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட இசைஞானி இளையராஜா!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

பிரபல பாடகர் இசைஞானி இளையராஜா தனது பாடலினால் பலகோடி மக்களில் மனங்களை வென்றவர்.   இன்று சுவாமி தரிசனத்திற்க்காக கோவிலுக்கு சென்ற வேளையில் கோவிலில் அனுப்பப்பட்டுளார். இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 


இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது கருவறைக்கு முன் இருக்கும் அர்த்த மண்டபத்தில் அவர் நுழைந்தபோது, அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.  அதனால் அந்த மண்டபத்தின் படியருகே நின்று கொண்டே  இறைவனை தரிசித்து சென்றுள்ளார்.


தீவிர கடவுள் பக்தர், உலகளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இசைஞானிக்கு இப்படி நடந்ததா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  45 ஆண்டுகளுக்கும் மேலாக இசையில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். இவருடைய இசையில் தற்போது உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement