தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக காணப்படும் கீர்த்தி பாண்டியன் தும்பா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கடந்த ஆண்டு அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
குணச்சித்திர நடிகர் பாண்டியனின் மகள் ஆன கீர்த்தி, இயற்கையாகவே சினிமா மீது ஆர்வம் கொண்டவராக காணப்படுகின்றார். இவர் தனது தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
முதன் முதலாக இவர்களுடைய தயாரிப்பில் சவாலே சமாளி என்ற படம் தயாரிக்கப்பட்டது. அதில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்திருந்தார்.
d_i_a
அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் 10 வருடங்களாக காதலித்த நிலையில், இரண்டு வீட்டார்களின் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே இவர்கள் இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில், கீர்த்தி பாண்டியன் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணகி படத்தின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு அதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்போது இதனை முதலில் பார்த்த ரசிகர்கள் கீர்த்தி பாண்டியன் கர்ப்பமாக இருக்கின்றாரா என்று இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
ஆனாலும் அதற்கு பிறகு அவர் பதிவிட்ட பதிவில் கண்ணகி திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது என்றும், இந்த படம் தனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமானது என்றும் அனைவருக்கும் நன்றி சொல்லி பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவை பார்க்காமல் கீர்த்தி பாண்டியன் அவர் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.
Listen News!