• Jan 18 2025

நடுவீட்டில் அழுதுபுலம்பி ட்ராமா போட்ட விஜயா.. முத்து எடுத்த முடிவால் அதிர்ச்சியில் ரோகிணி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா  பணத்தை காணவில்லை என்றதும் ரதியின் அம்மாவிடம் பார்வதி பணத்தை செலவு செய்துவிட்டார். அதனால் பிறகு காசு தந்து விட்டு சாரியை வாங்கிக் கொள்கின்றேன் என்று அவர்களை அனுப்பி வைக்கின்றார். அதன் பின்பு விஜயாவும் பார்வதியும் பணத்தை தேடுகின்றார்கள்.

எனினும் பார்வதியின் நகைகள், பணம் என்பவை பத்திரமாக இருக்க விஜயாவின் பணத்தை மட்டும் காணவில்லை. இதனால் தனது பணம் மட்டும் எப்படி காணாமல் போகும் என்று யோசிக்கிறார். அந்த நேரத்தில் மீனா துணி மடித்து வைத்து விட்டு போனதை சொல்லி மீனாதான் பணத்தை எடுத்து இருக்கனும்  என்று சொல்லுகின்றார். ஆனாலும் பார்வதி மீனா அப்படி செய்திருக்க மாட்டார் என்று சொல்லுகின்றார்.

ஆனாலும் விஜயா மீனாவின் குடும்பம் திருட்டு குடும்பம். மீனாதான் பணத்தை எடுத்து இருக்கனும். நீ போன் பண்ணி கேளு என்று சொல்ல, நான் அப்படி செய்ய மாட்டேன் என்று பார்வதி சொல்லுகின்றார். அப்படி என்றால் நான் ஃபோன் பண்ணுகின்றேன் என்று சொல்லி வீட்டுக்கு செல்கின்றார். வீட்டுக்கு சென்ற விஜயா பார்வதிக்கு போன் பண்ணி பணத்தை காணவில்லையா? மீனாதான் அங்கு வந்தாரா என்று மீனா மீது பழியை போடுகின்றார்.


இதன் போது கோபத்தில் முத்து போனை பறித்து பார்வதியிடம் மீனா அப்படி செய்ற பொண்ணா? நீங்களே அப்படி சொல்லலாமா? போலீஸ் ஸ்டேஷன் போங்க.. நாங்க அங்க பார்த்துக் கொள்வோம் என்று சொல்லுகின்றார். அதன் பின்பு விஜயா பணத்தை எடுத்தால் கொடுத்துவிடுமாறு அழுது ஒப்பாரி வைக்கின்றார். 

இதை பார்த்த அண்ணாமலை வீணா பழி போட்டு முத்து மீனாவை வெளியே விரட்ட பாக்குறியா? நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அது நடக்காது என்று சொல்லுகின்றார். திருட்டு விஷயம் மீனா பக்கம் திரும்பியதை நினைத்து ரோகினி சற்று நிம்மதியாக காணப்படுகின்றார். ஸ்ருதியும் என்னதான் இருந்தாலும் மீனா மீது எப்படி பழி போடுவீங்க என்று விஜயாவுக்கு பதிலடி கொடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement