• Sep 20 2024

தாய், தந்தையுடன் சுற்றுலா சென்ற விஜய்.. தீயாய் பரவி வரும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய்.கடந்த 13ம் திகதி தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் பீஸ்ட். இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்ததோடு இப்படத்தில் பூஜா ஹெப்டே கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்த படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது.

இவ்வாறுஇருக்கையில் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் இப்படத்தை, தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகர், விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு துவங்கிய இந்த சர்ச்சை இன்று வரை ஊடங்களில் ஒரே பேச்சாக தான் காணப்படுகின்றது.

இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் பனி பிரதேசத்தில் எடுத்துக்கொண்ட சுற்றுலா புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்த அழகிய தருணத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement