• Oct 08 2024

கிளியர் வின்னர் மணிமேகலை தான்... பிரியங்கா பற்றி புட்டு புட்டு வைத்த சுசித்ரா! வீடியோ இதோ..

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்கு பற்றியவர் தான் மணிமேகலை. இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கு பற்றியவர் பிரியங்கா. ஆனாலும் இவர் பிரபல விஜே ஆக காணப்படுகின்றார். தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியதுடன் அதற்கு காரணம் ஒரு தொகுப்பாளினி தான் எனவும்  நேரடியாகவே தெரிவித்து இருந்தார்.

மணிமேகலை குறித்து தொகுப்பாளினி யார் என சொல்லா விடினும் அது பிரியங்கா தான் என தற்போது சமூக வலைத்தளங்களை சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. இதன் காரணத்தினால் பிரியங்காவுக்கு எதிராக பலர் குரல் கொடுக்க தொடங்கியுள்ளார்கள். மேலும் பிரியங்கா பலரது வாழ்க்கையை கெடுத்துவிட்டார். பிரியங்கா வந்த பிறகு பல தொகுப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள் என பலரும் பலவாறு பேச தொடங்கியுள்ளார்கள்.

அதேவேளை பிரியங்காவால் பலர் முன்னுக்கு வந்துள்ளார்கள். அவர் பலருக்கும் சப்போர்ட் ஆக இருந்துள்ளார் என இன்னொரு பக்கத்தில் பிரியங்காவின் ரசிகர்கள் பழைய வீடியோக்களை வைரல் பண்ணி வருகின்றார்கள். தற்போது இவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனையில் பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.


இந்த நிலையில், தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக காணப்பட்ட சுசித்ரா தற்போது மீண்டும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மணிமேகலை பற்றியும் பிரியங்கா பற்றியும் புட்டு புட்டு வைத்துள்ளார். 

அதன்படி அவர் மணிமேகலை பற்றி கூறுகையில், மணிமேகலை உண்மையிலே ஒரு பட்டர்பிளை போல.. சட்டென வந்து சட்டென மறையும் குணம் கொண்டவர். அவர்தான் சரியானவர் ஆங்கரிங் பண்ணுவதில்.. ஆனால் பிரியங்கா கத்தி கத்தி தான் ஆங்கரிங் பண்ணுவார். தனக்கு அது தெரியும் இது தெரியும் என பில்டப் செய்வார் என்று தனது கருத்தை மீண்டும் பதிவிட்டுள்ளார் சுசித்ரா. குறித்த வீடியோ இதோ..


Advertisement