• Jan 19 2025

'தூம் 4' படத்தில் வில்லனாக என்ட்ரி ஆகிறாரா சூர்யா? தீவிரமான பேச்சு வார்த்தை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் மிகவும் வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றுதான் தூம். இந்த படத்தின் நான்காவது பாகம் பற்றி ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளார்கள். தற்போது தூம் படத்தின்  நான்காவது பாகத்தை உருவாக்க இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த படத்தில் ஆதித்யா சோப்ரா, அயன் முகர்ஜி, விஜய் கிருஷ்ணா, ஆச்சார்யா மற்றும் ஸ்ரீதர் ராகவன் இணையுள்ளதாக கூறப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த த்ரில்லிங் படத்தின் 20 ஆண்டுகள் நிறைவை அண்மையில் படக்குழுவினர் கொண்டாடி பதிவிட்டு இருந்தார்கள்.

இந்த படம் சாதாரண போலிஸ் திருடன் கதைக்களத்தில் பரபரப்பான திரைக்கதை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன.


இந்த நிலையில்,  தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தூம் 4ம் பாகத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யாவை அணுகி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது. அத்துடன் சூர்யா அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி உள்ளமையால் இதன் பேச்சு வார்த்தை இழுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement