• Apr 26 2024

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சு- எந்த கோயிலில் திருமணம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என பலராலும் அறியப்பட்ட நடிகை நயன்தாரா . இவர் 2003ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி 2005இல் ஐயா என்ற படத்தில் சரத்குமாரின் ஜோடியாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜனி காந்தின் ஜோடியாக சந்திரமுகியில் நடித்து திரையுலகில் பிரபல்யமானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் தன் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் மட்டுமன்றி மலையாளம், தெலுங்கு, போன்ற சினிமாத்துறையிலும் தனக்கெனெ ஓர் இடத்தில் புகழ் பெற்ற நடிகையாக வலம்வருகின்றார் .

கடந்த 2015இல் இயக்குநர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கினார் .இதில் விஜய் சேதுபதியுடன் நடித்திருந்தார் , இதைத்தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயந்தாராக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது , இந்த அழகிய நட்பு காதலாக மாறி 7 வருடங்கள் கடந்து இன்று திருமணம் வரை வந்துள்ளது

இந்தநிலையில் நடிகை நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதியில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாம். இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமண ஏற்படுகளை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.

https://www.youtube.com/embed/fLflgyaXVvs

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement