• Apr 23 2024

AK61 திரைப்படத்திலிருந்து கிடைத்த புதிய அப்டேட்- படத்திற்காக இது உருவாக்கப்பட்டதா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து AK61 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் பயன்படுத்த மிகப்பெரிய அளவில் ரூபாய் நோட்டுகள் தேவைப்படும் என்பதால் தற்போது சென்னையில் இருந்து இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்துக்கு படப்பிடிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

https://www.youtube.com/embed/fLflgyaXVvs

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement