• Jan 19 2025

பழம்பெரும் நடிகையான சிஐடி சகுந்தலா காலமானார்! திரையுலகினர் அஞ்சலி

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

1960 ஆம் ஆண்டு வெளியான சிஐடி சங்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் சகுந்தலா. அதன்பின்பு படிக்காத மேதை, தவப்புதல்வன், வசந்த மாளிகை, கை கொடுத்த தெய்வம், திருடன், நீதி, பாரத விலாஸ், ராஜராஜ சோழன், என் அண்ணன், இதயவீணை என தாராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். சினிமாவில் இருந்து விலகிய பிறகும் சீரியல்களில்   தனது கவனத்தை செலுத்தினார். அதன் பிறகு வயது மூப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.


இந்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் நடந்துள்ளது. தற்போது அவருடைய மறைவிற்கு பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement