• Apr 27 2024

சினிமாவில் உள்ள இரண்டு 'டான்' களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்-புகழ்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகிய இவர் தனது அயராத நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்துள்ளார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்பொழுது டான் என்னும் படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த வாரம் மே 13ம் திகதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ப்ரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவருடன் ஷிவாங்கி எஸ். ஜே சூர்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அவரை சிவகார்த்திகேயன் கட்டித்தழுவி வரவேற்றார். விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சினிமா துறையில் இரண்டு டான்கள் இருப்பதாக கூறினார். அதில் ஒன்று சிவகார்த்திகேயன் என்றும், மற்றொன்று இசையமைப்பாளர் அனிரூத் என்றும் கூறியதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/fLflgyaXVvs

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement