• Oct 13 2024

பிரியங்காவை காப்பாற்ற என்னெல்லாம் பண்ணுறாங்க பாருங்க? எல்லாம் செட்டப்பா?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆங்கராக இருப்பவர் தான் பிரியங்கா. இவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக இந்த தூறையில் பணியாற்றி வருகின்றார். இதனால் ரசிகர்களின் அன்பையும் மதிப்பையும் பெற்று மிகவும் பிரபலமாக காணப்படுகின்றார்.

இவருடைய நகைச்சுவை மற்றும்  துருதுருவான பேச்சாலும் இவரை சுற்றி அப்போதும் ரசிகர் கூட்டம் காணப்படும். அத்துடன் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களையும் கலகலப்பாக வைத்துக் கொள்ளுவார்.

விஜய் டிவியில் பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்த பிரியங்கா தற்போது புது ஆங்கர்கள் வந்ததிலிருந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மட்டும் தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும் ஸ்டார் மியூசிக் ஷோவையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இதை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கு பற்றி திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.  ஆனாலும் சமையலே தெரியாத பிரியங்கா எப்படி குக்காக வந்திருக்க முடியும் என கேள்வி எழுப்பி வந்தனர்.


மேலும் அதே நிகழ்ச்சியில் பங்கு பற்றிய மணிமேகலை பிரபல பெண் ஆங்கரால் தன்னுடைய சுயமரியாதை பறி போகின்றது என்று குக் வித் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார். இதனால் சமூக வலைத்தள பக்கங்களில்  பிரியங்காவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், பிரியங்காவுக்கு  எதிராக பல குரல்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது பிரியங்காவுக்கு ஆதரவாக அவரின் பழைய பேட்டிகள் வைரலாகி வருகின்றன.

அதிலும் விஜய் டிவியில் காமெடி நடிகராக இருந்த தீனா தான் இந்த அளவுக்கு பிரபலமானேன் என்றால் அதற்கு பிரியங்கா தான் காரணம் எனக் கூறியிருப்பார். அதேபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவரால் எத்தனை பேர் கலகலப்பாக காணப்படுகின்றார்கள் என்பதை சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டு அதையும் வைரல் ஆக்கி வருகின்றனர்.

இவ்வாறு பிரியங்காவுக்கு என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதை சில வலைத்தள குரூப் செய்து வருகின்றது. இதற்கெல்லாம் காரணம் விஜய் டிவி தான் எனவும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement