• Sep 19 2024

திடீரென மருத்துவமனையில் பிக் பாஸ் ஜூலி-ஷாக்கில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் இவர் பேசிய வசனங்கள் இவரை ஒரு வீர மங்கையாக தமிழக மக்களுக்கு அடையாளம் காட்டியது. பலரும் ஜூலியை கொண்டாட ஆரம்பித்தனர்.

இந்நிலையில்தான் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருந்த பிக் பாஸ் போட்டிக்கு ஜூலி தேர்வானார்.

பிக் பாஸ் முதல் சீசனில் தனது பெயரை அதிகம் டேமேஜ் செய்து கொண்டார். அதனால் அவரை அதிகம் அளவு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். ஆனால் அந்த நிலையில் சமீபத்தில் ஓடிடியில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூலமாக சற்று மாறி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது ஜூலி தான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் ஷாக் ஆன நிலையில் அவர் கண்ணில் லேசர் சிகிச்சை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

அதனால் இனி கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement