• Apr 16 2026

தமன்னாவை விஜய் வர்மா திருமணம் செய்து கொள்ளமாட்டாரா?-வெளியாகிய அதிர்ச்சித் தகவல்- இப்பிடிச் சொல்லிட்டாரே...

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேடி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் தமன்னா.இதனைத் தொடர்ந்து இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கல்லூரி திரைப்படம் தான்.இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் 

அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆரம்பித்தார்.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் தமிழில் வாழ்ப்புக்கள் குறைந்ததால் ஹிந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.


பின்னர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தமன்னாவை  ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். 

இதற்கிடையே லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் நடித்தபோது அவருக்கும் நடிகர் விஜய் வர்மாவுக்கும் காதல் ஏற்பட்டது. அந்தக் காதலை இரண்டு பேருமே சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தனர். ஆனால் திருமணம் எப்போது நடக்கும் என்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேசமயம் விரைவில் திருமணம் செய்துகொள்ளும்படி இரு வீட்டார் தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் ஒரு தகவல் வெளியானது. 


இந்நிலையில் சமீபத்தில் விஜய் வர்மாவிடம் செய்தியாளர்கள் தமன்னாவுடன் திருமணம் எப்போது என கேள்வி எழுப்பினர். அதற்கு அவரோ, 'இதற்கு பதிலளிக்க முடியாது’ என ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஏன் விஜய் வர்மா பதிலளிக்க மறுக்கிறார். ஒருவேளை இரண்டு பேருக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதா எனக் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement