• Jan 18 2025

விஜய் டிவி சீரியல் நடிகையைத் திருமணம் செய்யவுள்ள சிங்கப் பெண்ணே சீரியல் நடிகர்- அடடே இவரை தான் காதலிக்கிறாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று சின்னத்திரையில் ஏராளமான ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. அந்த வகையில் ஆரம்பமாகிய சில வாரங்களிலேயே டிஆர்பியில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கும் சீரியல் தான் சிங்கப் பெண்ணே.

 ஏற்கனவே டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த கயல் சீரியலை இது பின்னுக்கு தள்ளிவிட்டது.சிங்கப்பெண்ணே தொடரில் ஹீரோவாக நடித்து வரும் அமல்ஜித் பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.


 அவருக்கு விஜய் டிவி நடிகை உடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.விஜய் டிவியில் கண்ணே கலைமானே சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் பவித்ரா அரவிந்த் என்பவரை தான் அமல்ஜித் காதலித்து வருகிறார்.


அவர்கள் காதலுக்கு வீட்டில் ஒப்புதல் கிடைத்துவிட்டதால் விரைவில் திருமணம் செய்ய இருக்கின்றனர் என தகவல் வெளியாகி இருக்கிறது. இவர்கள் இருவரும் இதற்கு முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அம்மன் சீரியலில் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement