• Jan 19 2025

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நலம் குறித்து விசாரித்த விஜய்- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தான் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய லியோ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்திருந்தது. அத்தோடு இப்படம் வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனால் இப்படத்தின் வெற்றி விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் நாட்டில் எந்த இடத்தில் ஒரு நல்ல விஷயம் இருந்தாலும் அதில் நம்ம பையன் இருக்கான் என சந்தோஷப்பட வேண்டும் என கூறியிருந்தார். அவர் கூறிய அந்த வார்த்தைக்கு உதாரணம் காட்டும் வகையில் விஜய் ரசிகர்கள் இப்போது மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.


யாருடைய உதவியும் கிடைக்காத இடங்களுக்குக் கூடச் சென்று தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். தனது ரசிகர்கள் கஷ்டப்படும் மக்களுக்கு இரவு-பகல் பார்க்காமல் உதவி வர தற்போது பெருங்குடி மக்கள் மன்ற நண்பருக்கு போன் செய்து அங்கே இருக்கும் பாதிப்புகள் குறித்து விசாரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement