இந்திய சுதந்திரம் என்பது ஒரு நாள் பரிசாக கிடைத்திருக்கவில்லை.கிட்ட தட்ட 200 ஆண்டுகால அடிமைப்படுத்தலின் கீழ் இருந்த இந்தியத் திருநாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திர பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
அதுவரை இந்திய நாடு அடைந்த நட்டத்தில் முதன்மையானது ஆயிரமாயிரம் உயிர்கள்.சுதந்திரத்திற்காக போராடி மாண்ட அத்தனை வீரர்களையும் இன்றையநாளில் நினைவு கூருவது மிக முக்கியமாகும்.இந்நிலையில் தனது சுதந்திரதின வாழ்த்தை தெரிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்.
தனது சுதந்திர தின வாழ்த்தில் "சாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து, சமூக நல்லிணக்கத்தோடும் வேற்றுமையில் ஒற்றுமையோடும். நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட வீரர்களையும் தியாகிகளையும் நினைவுகூர்ந்து எந்நாளும் போற்றுவோம்!" என குறிப்பிட்டுளார் விஜய்.
#IndependenceDay2024 pic.twitter.com/321VECPbAF
Listen News!