• Jan 19 2025

காதல் இல்லாமல் உலகம் இல்லை... ரியோவின் "ஜோ" திரைப்படம் எப்படி இருக்கு... முதல் விமர்சனம் இதோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ரியோ ராஜ் சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி இன்று வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர். இவர் முதன் முதலில் தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கினார். இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த ரியோ, அதை தொடர்ந்து நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


ரியோ நடிப்பில் உருவாகி வருகிற 24ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ள திரைப்படம் தான் ஜோ. ஹரிஹரன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரியோவுடன் இணைந்து மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் படத்தை பார்த்த திரையுலக நட்சத்திரமும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் படம் நன்றாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். 'காதல் இல்லாமல் உலகம் இல்லை. காதலுக்காக யாரும் சாகக்கூடாது. காதலிக்காமல் யாரும் சாகக்கூடாது' என்றும் பேசினார்.


மேலும் படம் பார்த்த மற்றவர்கள் சமுக வலைத்தளத்தில் கூறியுள்ள கருத்துகள் என்னவென்றால் 'ஜோ ஒரு ஆர்த்தமதமான திரைப்படம். சிறப்பான இயக்கம், ரியோ, மாளவிகா மற்றும் பாவ்யா மூவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி சூப்பர்' என படத்தை பாராட்டி தங்களுடைய விமர்சனங்கள் தெரிவித்து வருகிறார்கள்.டத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்ததன் மூலம் முதல் நல்ல ரசிகர்கள் இடையே வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் எப்படி இருக்கிறது என எதிர் வரும் 24ஆம் திகதி திரையரங்கில் பார்த்து தெரிந்துகொள்ளவோம். 



Advertisement

Advertisement