• Dec 04 2024

Real அமரனிற்கு ரசிகர் ஒருவர் வழங்கிய பரிசு ! வைரலாகியுள்ள சூரிய ஒளி சித்திர காணொளி..

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

ராஜ்குமார் பெரியசாமி எழுத்து, இயக்கத்தில்,நடிகர் கமலகாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரிப்பில், 31 அக்டோபர் 2024 தீபாவளி அன்று வெளிவந்த தமிழ் அதிரடி போர்த் திரைப்படம் அமரன் ஆகும் . இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் ஆகவும் மற்றும் பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். இது இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்ட சிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பியர்லெஸ் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.

இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தற்போது முகுந்த் வரதராஜனின் புகைப்படம் ஒன்றினை சித்திர கலைஞர் ஒருவர் சூரிய ஒளியினை பயன்படுத்தி வரைந்துள்ளார் குறித்த காணொளியானது தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.


Advertisement

Advertisement