• Aug 23 2025

"அமரன்" படக்குழு வெளியிட்டுள்ள சுதந்திர தின சிறப்பு போஸ்டர் !

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தமிழ் சினிமாவின் இளவரசன் என புகழப்படும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமான "அமரன்"  உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

அமரன்' சிவகார்த்திகேயன்: SK21 படத்தின் டீசர் வெளியீடு | sivakarthikeyan  amaran title teaser release

மறைந்த இந்திய ராணுவ வீரரான முகுந்தன் வரதராஜன் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத் திரைப்படம் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வந்த நிலையில் வருகிற அக்டோபர் 31 இல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்போவதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

படம்

இந்நிலையில் இந்திய சுதந்திர தினமான இன்று எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களுக்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் அமரன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது."அவர்கள் வலுவாக நிற்பதால் நாங்கள் சுதந்திரமாக நிற்கிறோம், எங்கள் வீரர்களுக்கு வணக்கம்!" என்ற பதிவுடன் வெளியாகியிருக்கும் குறித்த போஸ்டர் தற்போது சமூக வலைதளமெங்கும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 


Advertisement

Advertisement