• May 03 2024

ரயில்வே மேலாளராக நடிகர் மாதவன்... மக்கள் உயிரை பறித்த உண்மை சம்பவத்தை எடுத்து காட்டும் the-railway-men... முழு விமர்சம் இதோ...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

தி ரயில்வே மென் என்ற வெப் சீரிஸ் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. மாதவன், கே கே மேனன் மற்றும் சிலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் நான்கு அத்தியாயங்களாக வெளியாகி இருக்கிறது. சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத இந்த தொடர் இப்போது அதிக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.


1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டு மற்றும் மூன்றாம் தேதிகளில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருந்தது போபால் விஷவாயு. கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வை அப்படியே கண்முன் காட்டி இருக்கிறது தி ரயில்வே மென் வெப் சீரிஸ். இதில் மத்திய ரயில்வேவின் மேலாளர் ரதி பாண்டேவாக மாதவன் நடித்திருக்கிறார்.


ரயில்வே நிறுவனத்தின் நேர்மையான ஸ்டேஷன் மாஸ்டராக இஃப்தேகர் சித்திக் என்ற கதாபாத்திரத்தில் கேகே மேனன் திறம்பட நடித்திருக்கிறார். டிசம்பர் இரண்டாம் தேதி நள்ளிரவு போபாலில் யூனியன் கார்ப்பரேட் ஆலையிலிருந்து மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்த மீதைல் ஐசோசயனேட் விஷவாயு வெளியேறுகிறது.


the-railway-men மேலும் இந்த விஷவாயு காரணமாக உயிருக்கு பிரச்சினை இருக்கிறது என்பது தெரிந்தும் ரயிலில் பணிபுரியும் அதிகாரிகள் உயிரைப் பனையம் வைத்து அதை தடுக்க முயற்சி செய்கிறார்கள். இப்போது மனிதம் பற்றி மக்கள் அதிகம் பேசி வரும் நிலையில் எண்பதுகளிலேயே தனது உயிரைப் பொருட்டாக நினைக்காமல் தியாகம் செய்ய துணிந்து இருக்கின்றனர்.


போபால் விஷவாயு சம்பவம் பற்றி பலருக்கும் தெரியாத நிலையில் தி ரயில்வே மென் வெப் சீரிஸ் மூலம் இயக்குனர் அழகாக காட்டியிருக்கிறார். இப்போது இந்த தொடர் இணையத்தில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் கட்டாயம் ரசிகர்கள் ஒருமுறையாவது இந்தத் வெப் தொடரை பார்த்தே ஆக வேண்டும் அந்த அளவுக்கு நன்றாக இருக்கிறது என பல நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement