• Feb 14 2026

விஜய், SK-க்கு இணையான ரசிகர்கள்.. கேப்டன் இடத்தை நான் நிரப்புவேன்.!திவாகரின் துணிச்சல்

Aathira / 4 days ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின்  9வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்  திவாகர். இவர்  டாக்டராகவும் காணப்படுகின்றார்.  ஆரம்பத்தில்  திவாகருக்கு எதிராக பல நெகடிவ் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

ஆனால்  அதற்குப் பிறகு  அவருக்கு தான் மக்களின் வாக்கு அதிகமாக காணப்பட்டது. எனினும் அவர் அதனை சரியாக பயன்படுத்தவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார்.  பிக் பாஸ் வீட்டில்  தான் நடிப்பு என்பதை நிரூபித்து  வந்தார். 

விஜய் சேதுபதி பலமுறை  எச்சரித்த போதும் கேமராவுக்கு முன்னால் நின்று தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டினார். மேலும்  இந்த தமிழ்நாட்டில் விஜய் அரசியலுக்கு போய்விட்டார், அஜித் ரேஸுக்கு போய்விட்டார், அதனால் தமிழ் சினிமாவை நான் தான் காப்பாற்ற போகின்றேன் என்று  புலம்பி தள்ளினார். 


இந்த நிலையில்  சமீபத்தில் திவாகர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.  அதில் அவர் கூறுகையில், ''நடிப்பு என்றால் சிவாஜிக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன். அதற்கடுத்து நான் தான். ஹீரோவாக அனைத்து திறமைகளும் இருக்கிறது. ஆனால் என்னை பார்த்து பயந்து, சூழ்ச்சிகள் செய்கிறார்கள். 

விஜய், SK-க்கு இணையாக எனக்கும் ரசிகர்கள் உள்ளனர். மதுரையில் இருந்து கேப்டன் விஜயகாந்துக்கு அடுத்து எந்த ஒரு நடிகரும் பெரிதாக தமிழ் திரையுலகுக்கு வரவில்லை. அந்த இடத்தை நிரப்ப நான் வந்துள்ளேன். அவரை போல அடுத்த நடிகர் சங்க தலைவராகவும் ஆவேன்’’

Advertisement

Advertisement