• May 20 2025

விஜய் சேதுபதியின் "ஏஸ்" திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்...! மகிழ்ச்சியில் படக்குழு ...!

Roshika / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் "விஜய் சேதுபதி" பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும்  நடித்து வருகின்றார். தற்போது "ஏஸ் " என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் . அந்த படத்திற்கான  U/A  சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  



இந்த நிலையில் ஆறுமுக குமாரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் "ஏஸ் " திரைப்படத்தில் மே 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, ருக்மணி வசந்த ,திவ்யா பிள்ளை, பி.எஸ். அவினாஷ், பப்லூ பிரித்வீராஜ்  எனப் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். 


இந்த படத்திக்கான படப்பிடிப்பு முழுவதும் மலோசியாவில் நடை பெற்றுள்ளது. இந்த படத்தில் காமெடி, ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக அமைந்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கு U/A  சான்றிதழ் வழங்கப்படுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.


அதாவது" U/A  என்பது குறிப்பட்ட வயதிற்கு குழந்தைகள்  தங்கள் பெற்றோர் வழிகாட்டுதலுடன் படம் பார்ப்பது நல்லது என மைய சென்சார் வாரியம் கொடுக்கும்  சான்றிதழாகும்". இதனை தொடர்ந்து மே 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகவல் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement