'அமரன்' திரைபடத்தின் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சாய் பல்லவி பெற்று கொண்டார். இந்நிலையில் விருதினை பெற்ற சாய்பல்லவி செய்தியாளர்கள் முன் முகுந்த் குடும்பத்தினருக்கு நன்றி கூறி எமோஷனலாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை அமரன் திரைப்படம் பெற்றது. சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை ஜி.வி. பிரகாஷ் பெற்று கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதினை நடிகை சாய்பல்லவி பெற்று கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாய்பல்லவி இவ்வாறு கூறியிருந்தார்.
அவர் கூறுகையில் "இந்த விருதினை வாங்கியத்தில் ரொம்ப சந்தோசம், இந்த வருடம் ரொம்ப நல்ல படங்கள் வந்து இருக்கு அதுல என்னை சிறந்த நடிகையாக தெரிவு செய்ததற்கு நன்றி. முக்கியமாக விருதினை தாண்டி ரசிகர்கள் அணைவரும் கொடுக்குற அன்பு எமோஷனலாக உள்ளது. இது எல்லாத்துக்குமே காரணம் முகுந்த் சார் குடும்பம் தான். அவங்க முகுந்த் வரதராஜன் கதையை எடுக்க அனுமதி தந்ததுதான் காரணம். இப்படி ஒரு சிறப்பான கதைக்கு எனக்கு வாய்ப்பு தந்தத்துக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவருக்கு ரொம்ப நன்றி" என எமோஷனலாக கூறியுள்ளார்.
View on Threads
Listen News!