தளபதி விஜய் நடித்து வரும் ’கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு
அவர் ’தளபதி 69’ என்ற படத்தில் நடிக்க
உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட
பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
‘தளபதி 69 ’திரைப்படத்தை எச் வினோத் இயக்க
இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை பிரபல
தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனம் டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க
இருப்பதாகவும் இந்நிறுவனம் ஏற்கனவே எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்.ஆர்.ஆர்’
உள்பட பல பிரமாண்டமான பட்ஜெட்
படங்களை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’தளபதி 69’ திரைப்படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்படுவதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் அது மட்டும் இன்றி
இந்த படத்தின் இயக்குனர் எச் வினோத் என்பதால்
இந்த படம் கூடுதலாக வியாபாரம்
செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்திற்கு 200 கோடி ரூபாய் விஜய்
சம்பளம் வாங்கியதாக கூறப்பட்ட நிலையில் ’தளபதி 69’ படத்திற்கு அவர் 250 கோடி ரூபாய் சம்பளம்
வாங்குவதாகவும் அந்த சம்பளத்திற்கு தயாரிப்பாளரே
வரி கட்ட வேண்டும் என்ற
நிபந்தனையுடன் விஜய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் மட்டும்
உண்மையாக இருந்தால் இந்திய திரை உலகில் அதிகம்
சம்பளம் வாங்குபவர் விஜய் தான் என்ற பெருமை
அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தளபதி 69’ படத்தில் விஜய்யின் சம்பளமே 250 கோடி என்றால் கண்டிப்பாக
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி ரூபாய் அளவுக்கு
இருக்கும் என்றும் இந்த படம் அசால்டாக
600 முதல் 700 கோடி ரூபாய் வசூல்
செய்யும் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
Listen News!