நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவின் கொண்டாட்டங்கள் குறித்த விருப்பம் தொடர்பாக பேசியுள்ள கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களாலும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விஜய் தேவரகொண்டாவின் குணாதிசயங்கள் குறித்து ராஷ்மிகா சுவாரஸ்யமாக பேசியுள்ளார்.
அதில், விஜய் தேவரகொண்டாவுக்கு எந்தவொரு விஷயத்தையும் பெரிதாக கொண்டாடுவதில் ஆர்வம் இல்லை என ராஷ்மிகா தெரிவித்துள்ளார். அதேவேளை, தனக்கு வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு முக்கியமான தருணத்தையும் கொண்டாட வேண்டும் என்ற விருப்பம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “விஜய் தேவரகொண்டா எதையும் கொண்டாட மாட்டார். ஆனால் நான் எல்லாவற்றையும் கொண்டாட வேண்டும் என விரும்புகிறேன். ஒவ்வொரு பிறந்தநாளும் முக்கியமானது. நாம் நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகில் நமக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.
அதனால், வாழ்க்கையில் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் கொண்டாடுவது மிகவும் முக்கியம் என நான் நினைக்கிறேன். ஆனால் விஜய் தேவரகொண்டாவுக்கு கொண்டாட்டங்களில் பெரிய ஆர்வம் இல்லை” என தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகாவின் இந்த கருத்து ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளதுடன், இருவரது குணாதிசயங்களிலும் இருக்கும் வித்தியாசம் குறித்தும் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!