• Oct 05 2026

மீனாவா இது.? இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் படுவைரல்.!

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி கதாநாயகியாக உயர்ந்து, இன்றளவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை மீனா. பல தலைமுறை ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள அவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய மீனா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல வெற்றிப் படங்களில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரையுலகில் பயணித்து வரும் மீனா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் சினிமா தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவர் எடுத்துள்ள சில புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தப் புகைப்படங்களில் மீனா மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அவரது பதிவுக்கு லைக்குகளும் கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement