• Oct 05 2026

30-40 படங்கள் நடித்திருக்கலாம்.. ஆனால் இதைமட்டும் செய்ததே இல்லை! ஸ்ரீநிதி ஷெட்டி ஓபன்டாக்

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தனது சம்பளம் தொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ள நிலையில், அவரது கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீநிதி ஷெட்டி, ‘கே.ஜி.எஃப்’ திரைப்படங்களின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக, ரீனா தேசாய் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.

இந்நிலையில், ‘கே.ஜி.எஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது சம்பளம் பல கோடிகளாக உயர்ந்துவிட்டதாக கூறப்படும் தகவல்கள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீநிதி ஷெட்டி, “கே.ஜி.எஃப் படங்களின் வெற்றிக்குப் பிறகு ரூ.7 முதல் ரூ.8 கோடி வரை சம்பளம் கேட்பதாக சிலர் கூறுகிறார்கள். நான் இதுவரை நடித்த திரைப்படங்களே மிகவும் குறைவு. அப்படியிருக்கும்போது அவ்வளவு பெரிய தொகையை எப்படி சம்பளமாக கேட்க முடியும்? எனவே, அது முற்றிலும் வதந்தி தான்.” என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கே.ஜி.எஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு அவசரப்பட்டு அடுத்தடுத்த திரைப்படங்களை ஒப்புக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

“பணம் சம்பாதிப்பது மட்டுமே எனது நோக்கமாக இருந்திருந்தால், கடந்த சில ஆண்டுகளில் 30 முதல் 40 திரைப்படங்களில் நடித்திருக்க முடியும். ஆனால், வெறும் பணத்துக்காக எந்தப் படத்தையும் ஒப்புக்கொள்ள விரும்பவில்லை. நல்ல கதை மற்றும் தரமான கதாபாத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறேன்” என ஸ்ரீநிதி ஷெட்டி தெரிவித்துள்ளார்.

அவரது இந்த நேர்மையான பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

Advertisement