• Jan 18 2025

நிச்சயதார்த்த தேதியை அறிவித்த விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி- அடடே இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் தான் விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கின்றார்கள்.இருப்பினும் இருவரின் கெரியரிலும் முக்கியமாக அமைந்த திரைப்படம் தான் கீதா கோவிந்தம்.

இப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் காவாலே பாடல் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகியது. அப்பாடலைப் போல் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் இருவருடைய கெமிஸ்ட்ரியும் பெரிய அளவில் பேசப்பட்டது.தொடர்ந்து இருவரும் காதலிக்கின்றார்கள் என்றும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் உலா வருவதுண்டு.


ஒரே இடத்தில் இருந்து இருவரும் தனித்தனியாக போட்டோ வெளியிட்டாலும் அதை ரசிகர்கள் தெளிவாக கண்டுபிடித்து அவர்கள் காதலிப்பதால் தான் ஜோடியாக புகைப்படம் வெளியிட தயங்குகிறார்கள் என கிளப்பிவிட்டனர். சில சமயங்களில் இருவரும் ஜோடியாக ஓட்டல்களுக்கு உணவருந்த சென்ற புகைப்படங்களும் கசிந்தன.

இப்படி கடந்த 5 ஆண்டுகளாக ஹாட் டாப்பிக் ஆக இருந்து வரும் விஜய் தேவர்கொண்டா - ராஷ்மிகா இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வருகிற பெப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாக தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் உலா வருகின்றன. 


காதலர் தின பரிசாக அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement