• Jan 18 2025

பிரதீப் பாத்ரூமில் தாழ் போடாமல் குளித்தமைக்கு இது தான் காரணமா?- உண்மையை உளறிக் கொட்டிய விஷ்ணு-வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரிாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.

முந்தைய 6 சீசன்களை விட, இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீட்டுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒரேயடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததும் யாரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. மேலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து இறுதியாக எலிமினேட் ஆகி விசித்ரா வெளியேறியிருந்தார்.


இதில் யார் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பே ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் விருப்பத்திற்குரி போட்டியாளராக இருந்தவர் தான் பிரதீப்.இவர் பாத்ரூமை தாழ் போடாமல் பயன்படுத்திய விவகாரம் கமல்ஹாசன் முன்னிலையில் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

இதன் உண்மை என்ன என்பதை விஷ்ணு மற்றும் பூர்ணிமா பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.வீடியோவில் விஷ்ணு கூறும்போது, பாத்ரூமில் நான் தாழ் போட்டேன், ஆனால் அதில் பிரச்சனை இருக்கிறது, எனவே அது தானாக திறந்துவிட்டது, அப்போது பூர்ணிமா என்னை பார்த்து விட்டார்கள் என்று புலம்புகிறார்.


அதற்கு பூர்ணிமா பாத்ரூமில் கேப் இருந்ததுங்க, நீங்க தாழ் போடவே இல்லை என்று கூற இல்லை இல்லை நான் தாழ் போட்டேன், அந்த கதவில் தான் பிரச்சனை என்கிறார் விஷ்ணு.இதே பிரச்சனை பிரதீப்புக்கு வந்தபோது மட்டும் வேண்டுமென்றே தாழ் போடாமல் பாத்ரூமை பயன்படுத்தினார் என சக போட்டியாளர்கள் முன்வைத்தனர். இப்போது விஷ்ணு மற்றும் பூர்ணிமா பேசியதை பார்த்தும் மக்கள் கடும் கோபமாக கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement