• Jan 18 2025

டைட்டில் வின்னராகும் தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது, அர்ச்சனாவுக்கு இல்லை- பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் ரகசியத்தை உடைத்த விசித்ரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி துவங்கிய நிலையில், அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ளது.

முதல் நாளே பிக்பாஸ் வீட்டின் உள்ளே, விசித்ரா, நிக்சன், மாயா, பூர்ணிமா, சரவணன் விக்ரம், அக்ஷயா, விஜய் வர்மா, பாவ செல்லத்துரை, உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் சென்றனர்.


முந்தைய 6 சீசன்களை விட, இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீட்டுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒரேயடியாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்ததும் யாரும் எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது.

மேலும் 95 நாள் பிக்பாஸ் வீட்டில் மிகவும் ஸ்ட்ராங் பிளேயராக இருந்தவர் தான் விசித்ரா.. ஃபைனலுக்குள் நுழைய தகுதி இருந்த போதும் இவர்  வெளியேறியது  ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பிக்பாஸில் இருந்து வெளியே வந்தவருக்கு அவரது உறவினர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

இந்த நிலையில் விசித்ரா பிக்பாஸிற்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.


அதில் அவர், எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி நான் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பேன் என்று எல்லாம் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.பிக்பாஸ் என்னை வெளியே அனுப்பியது நிறைய பேர் Unfair என்று சொன்னீர்கள், அந்த அளவிற்கு நான் மக்கள் மனதில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக இருக்கு.

என்னை பலரும் யார் டைட்டில் ஜெயிப்பார் என கேட்கிறார்கள், பலரும் கூறுவது அர்ச்சனா தான்.ஆனால் என்னை பொறுத்தவரையில் மாயா ஜெயித்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது, தனிப்பட்ட காரணம் இல்லை. பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த காரணத்தின் அடிப்படையில் தான் நான் கூறுகிறேன் என பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement