• May 09 2026

பாபா படத்தின் தோல்வியை கொண்டாடினார் விஜய்.! கொளுத்திப் போட்ட அந்தணன்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்  தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் தலைவராகவும்  செயற்பட்டு வருகின்றார். தற்போது விஜய் உடைய நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் படம்  அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம் தான் அவருடைய இறுதிப் படம் என  உறுதியானது. இதனால் இந்த படம் மீது பலரும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை  வைத்துள்ளனர். இந்த படம்  அரசியல் ரீதியாகவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த நிலையில், வலைப்பேச்சு அந்தணன்  விஜய் பற்றிய  தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஏற்கனவே ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே விரிசல் காணப்படும் நிலையில், அந்த காலத்தில் பாபா படம் தோல்வி அடைந்ததை நினைத்து  விஜய் பார்ட்டி வைத்து அதனை கொண்டாடியதாக தெரிவித்துள்ளார். 

சமீப காலமாகவே  ரஜினிக்கும் விஜய்க்கு இடையில் காக்கா கழுகு பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில்  விஜய் பற்றி அந்தணன் தெரிவித்த இந்த கருத்து  ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.



 

Advertisement

Advertisement