• May 09 2026

அப்பாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசை... ஆனால்.. சண்முகபாண்டியன் ஓபன்டாக்.!

shali / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் தனித்துவமான நடிப்பாலும், சமூக அக்கறையுடனான கதைகளாலும் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். நடிகர், அரசியல் தலைவர், மக்களின் நாயகன் எனப் பல பரிமாணங்களை கொண்ட அவரது வாழ்க்கை, இன்னும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இந்நிலையில், விஜயகாந்தின் மகனும் நடிகருமான சண்முக பாண்டியன், தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்று படம்  குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை. அதனை படமாக எடுப்பதற்கு சரியான இயக்குநர் கிடைக்க வேண்டும். அப்பாவின் வாழ்க்கை வரலாற்றை சுலபமாக படமாக்க முடியாது.'' என்று கூறியுள்ளார்.


விஜயகாந்தின் வாழ்க்கை என்பது, சாதாரண நடிகரின் பயணம் அல்ல. பல போராட்டங்களை சந்தித்து, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாகவும், மக்கள் நாயகனாகவும் உயர்ந்த அவரது பயணம், பல ஏற்றத் தாழ்வுகளை கொண்டது. அதோடு மட்டுமல்லாமல், அரசியலிலும் கால்பதித்து, தனக்கென ஒரு அரசியல் அடையாளத்தை உருவாக்கியவர்.

இந்த எல்லா அம்சங்களையும் ஒரே திரைப்படத்தில் சரியான முறையில் காட்டுவது மிகவும் சவாலான விஷயம் என்பதையே சண்முக பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement