• Apr 27 2026

இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற்றதா.? வெளியான ஷாக்கிங் தகவல்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகின்றது.  இந்த சீசனில்  டைட்டில் வின்னர் ஆக  வரக்கூடிய போட்டியாளர்கள் யார் என்பது  தற்போது வரையில் கணிக்க முடியாததாகவே காணப்படுகின்றது.

அந்த வகையில் ஆரம்பத்தில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த அரோரா  இறுதி பைனல் லிஸ்ட் ஆக வரக்கூடும் என பிக் பாஸ் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் வினோத்,  விக்ரம்,  சுபிக்ஷா, கனி  ஆகியோரும் பைனல் வரை செல்வார்கள் என்று கூறப்படுகின்றது. 

இந்த நிலையில்,  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதியாக இந்த வாரம் FJ வெளியேறி உள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது.  அவருடன் ஆதிரையும்  எலிமினேட் ஆனதாக கூறப்படுகிறது. 


ஏற்கனவே கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதில் ரம்யா ஜோவும் வியானாவும் எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தனர். அதன்படி இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடைபெற்றுள்ளதாகவும் அதில் FJ, ஆதிரை வெளியேறி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 


கடந்த வாரம் இடம்பெற்ற  கோர்ட் டாஸ்க்கில்  FJ ன் முகத்திரையை அரோரா கிழித்தெறிந்திருந்தார். இதன்போது  அரோராவின் இந்த தெளிவை பார்த்து  விஜய் சேதுபதியும் பாராட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement