• Dec 07 2024

வில்லனாக விஜய் ஆண்டனியின் குடும்ப உறுப்பினர்..ககன மார்கன் படத்தில் புதிய திருப்பம்..!

Mathumitha / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக 'ககன மார்கன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை மீரா விஜய் ஆண்டனி தயாரிக்க, லியோ ஜான் பால் இயக்குகிறார்.விஜய் ஆண்டனி இந்த படத்தில் உயர்நிலை காவல் அதிகாரியாக மாறுபட்ட தோற்றத்தில் நடித்து பார்வையாளர்களை கவரப்போகிறார். "ககன மார்கன்" என்ற வார்த்தை சித்தர்களின் அகராதியில் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று பொருள் பெறுவது குறிப்பிடத்தக்கது.


'ககன மார்கன்' என்பது குடும்பத்துடன் பார்த்து மகிழக்கூடிய த்ரில்லர் வகை திரைப்படமாக உருவாகியுள்ளது. இதற்கான இசையையும் விஜய் ஆண்டனியே தனியாக உருவாக்கியுள்ளார். படத்தில் விஜய் ஆண்டனியுடன், அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், தீப்ஷிகா, அர்ச்சனா (கலக்கப்போவது யாரு புகழ்), கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் போன்ற நட்சத்திரங்களும் இதில் இணைந்துள்ளனர். இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமாக, வில்லன் கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் அஜய் தீஷன், விஜய் ஆண்டனியின் அக்காவின் மகன் என்பதும் இந்த படத்துக்கு ஒரு தனிச்சிறப்பு சேர்க்கிறது.


சமீபத்தில் படக்குழுவால் வெளியிடப்பட்ட புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு இப்போது அதிகரித்துள்ளது.'ககன மார்கன்', தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது, இதனால் அது இந்திய அளவிலான பெரிய ரீச்சை பெறும் என நம்பப்படுகிறது.

Advertisement

Advertisement